மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று திங்கட் கிழமை தேதி 01.02.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் நீங்கும்.
ரிஷபம் :
குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அதிருப்திக்கு ஆளாக கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். எதிலும் பொறுமையுடன் இருப்பது வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மிதுனம் :
குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் இருக்கும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கடகம் :
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கூடுவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
சிம்மம் :
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூல் ஆகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.
கன்னி :
குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
துலாம் :
குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம் :
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் அமையும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் தீரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிட்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழக் கூடும் .
மகரம் :
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.
கும்பம் :
வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
மீனம் :
நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.