இன்றைய ராசிபலன் 01.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 01.04.2021, நல்ல நேரம் :காலை 10-30-11.30, மாலை 12.30- 1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. எடுத்த வேலைகள் யாவும் காலதாமதம் ஆகும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்களோ, நண்பர்களிடமோ பேசும் போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துதல் நல்லது.

ரிஷபம் :

வீட்டில் சுபசெய்திகள் வந்தடையும் நாளாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் ஏற்பட்டு அலைச்சல் அதிகமாகும். பிறரிடம் கொடுத்த பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம் :

உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வாகன யோகத்திற்காக காத்திருந்தவர்களுக்கு இன்று நல்ல நாள்.

கடகம்:

குடும்பத்தில் பெரியோர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பணிகளை காலம் தாழ்த்தி செய்ய நேரிடலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியாக பயணங்கள் தோன்றும். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சேமித்த தொகை உதவும்.

சிம்மம்:

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இலக்குகளை அடைவதில் சில தடைகள் ஏற்பட்டாலும் உங்கள் திறமைகளால் சமாளித்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்களுடைய கருத்துக்களை பிறர் ஆதரிப்பார்கள்.

கன்னி:

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான நாளாக அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்வீர்கள். சமூக பொறுப்பில் இருந்து மக்கள் பணியில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.

துலாம்:

கணவன் மனைவி இடையே உண்டான உறவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அதன் பொருளை உணர்ந்து செயல்படுங்கள். பணிகளை ஆற்றும்போது சில ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும்.

விருச்சிகம்:

கணவன்-மனைவி இடையே உண்டான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் சற்று கவனமாக இருப்பது நல்லது . தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து புதிய உத்திகளை மேற்கொண்டு பயன் அடைவீர்கள்.

தனுசு :

குடும்ப உறவுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய நாளாக அமையும். பொழுதுபோக்கு சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ணிகளை நம்பிக்கையுடன் கவனமாக கையாள வேண்டியது அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான செலவுகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்:

வேலை மற்றும் தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமாக காணப்படும். இலக்குகளில் தொடர் வெற்றி ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்:

எந்த ஒரு காரியத்தை முடிவு எடுக்கும் பொழுது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தாரிடம் நேரம் ஒதுக்குவதால் உங்கள் மனஅழுத்தம் குறையும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

Exit mobile version