மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்

இன்று செவ்வாய் கிழமை தேதி 01.12.2020,நல்ல நேரம் : காலை 7.45 – 8.45,மாலை 5.15 – 6.00
ராகுகாலம் மாலை 3.00-4.30,
எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும்உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் முயற்சிகள் செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும் .
ரிஷபம்:
வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் ஏற்படலாம் .வாகன வகையில் யோகம் உண்டாகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் அரசு துறையில் வேலைவாய்ப்பு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்
மிதுனம்:
புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.கல்வியில் நீங்கள் இன்று தொட்டது அனைத்தும் கை கூடும்.வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவருக்கு வெற்றி கிடைக்கும்.
கடகம்:
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்றாலும் சற்று கவனமாக இருத்தல் நல்லது.புதிய தொழில் முயற்சிகள் மற்றும் சுபகாரிய பேச்சுவார்த்தை போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம் :
நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.புது தொழில் முயற்சிகளை இந்த தவிர்த்துக்கொள்வது நல்லது.வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.
கன்னி:
சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை எளிதில் வெற்றி கொள்வீர்கள்.வேலை பார்க்கும் இடத்தில் பணிச்சுமை நிறைய இருந்தாலும் நிர்வாகத்திடம் நல்ல பெயர் கிட்டும்.
துலாம்:
உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு உண்டாகும்.செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயரை பெற்று புகழ் அடைவீர்கள்.சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து கொள்ளும் நல்ல நாளாய் அமையும்.
விருச்சிகம்:
பெண்கள் தொடர்பான வகையில் ஆண்களும், ஆண்கள் தொடர்பான வகையில் பெண்களும் சற்று விலகி நிற்பது நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொண்டால் இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்பு விலகிவிடும்.
தனுசு:
இன்று உங்களுக்கான நாள் உங்கள் கைகளில் வெற்றி வந்து அமையும்.அரசு துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம்.உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்
மகரம்:
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும் உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்:
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.கணவன் மனைவி உறவு இன்று சிறந்து விளங்கும்.தொழில் சம்மந்தமாக உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு.இன்று முதல் உங்கள் வாழ்வில் புது மாற்றம் ஏற்படும்.
மீனம்:
காதல் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மிக பெரிய உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.