இன்றைய ராசிபலன் 02.02.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 02.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 3.00-4.00, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

ரிஷபம் :

உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம் :

நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.

கடகம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் :

உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கன்னி :

நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.

துலாம் :

உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் உரிய நேரத்தில் கிடைக்கும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

Read more – போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

தனுசு :

பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம் :

பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்க கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கும்பம் :

பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

மீனம் :

உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

Exit mobile version