மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 02.12.2020,நல்ல நேரம் : காலை 9.15 – 10.15,மாலை 4.45 – 5.45
ராகுகாலம் நண்பகல் 12.00-1.30,
எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
பொருளாதார பற்றாக்குறை சிறிதளவு இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொள்வீர்கள்.வாகன யோகம் உண்டு.புதிய தொழில் மேற்கொள்வதருக்கான சிறந்த நாள் இன்றைய நாள்.கல்வி சார்ந்த விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்ததாக அமையும் .
ரிஷபம்:
வேலை பார்க்கும் நிறுவனத்தில் நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.இன்று தொழில் சார்ந்த விசயங்களில் வெற்றி மட்டுமே கைகூடும்.எந்த ஒரு காரியத்திற்கு முன்பு ஒரு முறை குல தெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் சிறப்பாய் இயங்கும்.
மிதுனம்:
சொத்துகளை வாங்குதல்,விற்றல் போன்ற நீண்ட நாள் இருந்த சிக்கல்கள் இன்று தீர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.இன்று உங்களுக்கும் அனைத்து காரியங்களும் நல்லதாகவே நடக்கும்.பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
கடகம்:
நண்பர்கள் மற்றும் சொந்தக்கார்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.அரசு பணி சம்பந்தமான விஷயங்கள் இன்று தொடர்வது நல்லது.
சிம்மம்:
முன்கோபம் உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது.பல வழிகளில் பல கஷ்டங்கள் வந்தாலும் அதை எளிதாக கடந்து கொள்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நல்ல உறவு மேம்படும்.வாழ்க்கையில் நிம்மதியான வாழ்க்கை மேம்பட அதிக வாய்ப்பு உண்டு.
கன்னி:
கல்வியில் நீங்கள் இன்று தொட்டது அனைத்தும் கை கூடும்.வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவருக்கு வெற்றி கிடைக்கும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்றாலும் சற்று கவனமாக இருத்தல் நல்லது
துலாம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
வாகன வகையில் யோகம் உண்டாகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் அரசு துறையில் வேலைவாய்ப்பு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் ஏற்படலாம்.
தனுசு:
உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் முயற்சிகள் செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும் .
மகரம்:
நீண்ட நாட்கள் இழுத்துக்கொண்டு இருந்த காரியம் இன்று முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.கல்வியில் நீங்கள் இன்று தொட்டது அனைத்தும் கை கூடும்.வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவருக்கு வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள் குறிப்பாக திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்திகள் கிடைப்பது. ஆதாயம் அனுகூலம் கிடைப்பது என்று நல்லதொரு நாளாக அமையும்.
மீனம்:
உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டாகும்.புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.