இன்றைய ராசிபலன் 07.02.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்று கிழமை தேதி 07.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 3.30-4.30, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் காலை 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம் :

உங்கள் ராசிக்கு மாலை 4.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம் :

நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம் :

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம் :

குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி :

உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

துலாம் :

குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். குடும்ப உறுப்பினருடன் தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைத்து நன்மை அளிக்கும்.

தனுசு :

குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும்.

மகரம் :

உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்பட்டு சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம்.

Read more – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

கும்பம் :

இல்லத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி தருவீர்கள்.

மீனம் :

குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Exit mobile version