இன்றைய ராசிபலன் 08.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 08.04.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 12.00- 1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் திருமண சுப முயற்சிகளில் நல் முறையில் நடைபெறும். விடிந்தவுடன் நற்செய்திகள் காதில் வந்தடையும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம் :

குடும்பத்தில் பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும். உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம் :

உறவினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்து அன்பு அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் விதைத்த விதைக்கு இன்று உங்களுக்கு பலன் கிடைக்கும்.

கடகம் :

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சிம்மம் :

உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாவதால் மனம் அமைதி பெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும்.

கன்னி :

குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம் :

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சங்கடமான நிகழ்வுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருந்து உதவுவார்கள்.

ருச்சிகம்:

கணவன்-மனைவி இடையே உண்டான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் சற்று கவனமாக இருப்பது நல்லது . தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து புதிய உத்திகளை மேற்கொண்டு பயன் அடைவீர்கள்.

தனுசு :

குடும்ப உறவுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய நாளாக அமையும். பொழுதுபோக்கு சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ணிகளை நம்பிக்கையுடன் கவனமாக கையாள வேண்டியது அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான செலவுகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்:

வேலை மற்றும் தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமாக காணப்படும். இலக்குகளில் தொடர் வெற்றி ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்:

எந்த ஒரு காரியத்தை முடிவு எடுக்கும் பொழுது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தாரிடம் நேரம் ஒதுக்குவதால் உங்கள் மனஅழுத்தம் குறையும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

Exit mobile version