இன்றைய ராசிபலன் 14.01.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 14.01.2021, நல்ல நேரம் :காலை 12.30-1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

காதல் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மிக பெரிய உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் முயற்சிகள் செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும் .

மிதுனம்:

புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும். கல்வியில் நீங்கள் இன்று தொட்டது அனைத்தும் கை கூடும். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்றாலும் சற்று கவனமாக இருத்தல் நல்லது. புதிய தொழில் முயற்சிகள் மற்றும் சுபகாரிய பேச்சுவார்த்தை போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

சிம்மம் :

வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் ஏற்படலாம் . வாகன வகையில் யோகம் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் அரசு துறையில் வேலைவாய்ப்பு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கன்னி:

சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை எளிதில் வெற்றி கொள்வீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் பணிச்சுமை நிறைய இருந்தாலும் நிர்வாகத்திடம் நல்ல பெயர் கிட்டும்.

துலாம்:

நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புது தொழில் முயற்சிகளை இந்த தவிர்த்துக்கொள்வது நல்லது.

விருச்சிகம்:

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவு இன்று சிறந்து விளங்கும். தொழில் சம்மந்தமாக உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு.இன்று முதல் உங்கள் வாழ்வில் புது மாற்றம் ஏற்படும்.

தனுசு:

உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு உண்டாகும்.செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயரை பெற்று புகழ் அடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து கொள்ளும் நல்ல நாளாய் அமையும்.

Read more – தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2021

மகரம்:

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். அரசு துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம்.

கும்பம்:

இன்று உங்களுக்கான நாள் உங்கள் கைகளில் வெற்றி வந்து அமையும். உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும் உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்:

பெண்கள் தொடர்பான வகையில் ஆண்களும், ஆண்கள் தொடர்பான வகையில் பெண்களும் சற்று விலகி நிற்பது நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொண்டால் இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்பு விலகிவிடும்.

Exit mobile version