இன்றைய ராசிபலன் 16.01.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 16.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 5.00-6.00, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் மாலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரலாம். உயர் கல்விக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியாகும்.

ரிஷபம் :

குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வியாபாரத்தில் தடைகளை தாண்டி மற்றும் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சொத்து பிரச்சனை விலகி நன்மை அளிக்கும்.

மிதுனம்:

வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிக அளவில் காணப்படும்.

கடகம்:

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் கைகூடும்.வரவு செலவு கணக்குகளில் சற்று கவனமுடன் இருந்தால் நல்லது.

சிம்மம்:

தீடிர் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி:

உறவினர்கள் வழியாக நற்செய்தி ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும். உங்கள் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நன்மை தரும்.

துலாம்:

பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும் குறித்த நேரத்திற்குள் பணியை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. எதையும் யோசித்து செயலாற்றுவது நல்லது.

விருச்சிகம்:

பணியில் உங்கள் நேர்மை குறித்து உங்கள் உயரதிகாரிகளால் பாராட்ட படுவீர்கள். தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுங்கள்.

Read more – திருவள்ளுவர் தினம் : ட்விட்டரில் முதல்வர் புகழாரம்!

தனுசு:

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வீண் சண்டைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மனதை அமைதிப்படுத்த வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது.

மகரம்:

தீடிர் செலவுகள் எதிர்பாராத விதத்தில் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.உங்களிடம் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

கும்பம்:

தாய் மற்றும் தந்தை உறவுகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கும். புதிய வழிப்போக்கர்களிடம் பழகும்போது கவனமாய் இருத்தல் நல்லது. குழந்தைகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும்.

மீனம்:

எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். சொந்தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி பந்தங்கள் தொடரும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

Exit mobile version