மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 16.03.2021, நல்ல நேரம் :காலை 8.00-9.00, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
ரிஷபம் :
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் :
உறவினர்கள் வருகையால் வீட்டில் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கடகம் :
உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும் கவனமுடன் இருப்பது நல்லது.
சிம்மம் :
கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். வலிமையான மன பலத்தை கொண்டு இருப்பீர்கள்.
கன்னி :
வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
துலாம் :
உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மன நிம்மதி தரும் செயல்களில் ஈடுபடுவது நல்லது.
விருச்சிகம் :
குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தனுசு :
தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.
மகரம் :
உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எடுத்த காரியத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
கும்பம் :
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
மீனம் :
உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும் போது விட்டு கொடுத்து சென்றால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
