இன்றைய ராசிபலன் 20.02.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 20.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.

ரிஷபம் :

உங்களின் கடின உழைப்பால் வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். தொழில் ரீதியான விஷயத்தில் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம் :

எடுக்கும் அனைத்து முயற்சிகள் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தில் பெற்றோருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும்.

கடகம் :

வேலையில் உற்சாகத்துடன் செயல்பட்டு சக ஊழியர்களையும் உற்சாகப்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

சிம்மம் :

வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நற்பலனை அளிக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி :

நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

துலாம் :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வெற்றி தரும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளாக அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும்.

தனுசு :

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

மகரம் :

கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும் போது விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும்.

Read more – தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்…

கும்பம் :

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவ மனிதர்களிடம் ஆலோசனை பெறுவது தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

மீனம் :

உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

Exit mobile version