மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று சனிக்கிழமை தேதி 23.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.00, மாலை 11.30-12.00, ராகுகாலம் மாலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30 – 3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் வந்தடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ரிஷபம் :
வீட்டில் சுப செய்திகள் கிடைக்கப் பெற்று இன்று நல்ல நாளாக அமையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வழக்கு போன்ற விசயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.
மிதுனம் :
வேலையில் பார்க்கும் நிறுவனத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளினால் சில நெருக்கடிகள் உண்டாகும். வீட்டில் பிரச்சனைகளும் விலகும்.
கடகம் :
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம் :
உங்களால் வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். உங்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி :
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபத்தைக் கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளி இணைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் :
எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் முக்கியமான காரியங்களை அதிகம் பேச வேண்டாம்.
விருச்சிகம் :
குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல மாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு :
உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய யுக்திகளை செயல்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல பலனைக் கொடுக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் சேர்க்கை வாங்குவீர்கள்.
மகரம் :
இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக அமையும். அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் மன உளைச்சலை கொடுக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவால் எதிர்பார்த்த உதவிகள் வந்தடையும். தொழில் ரீதியான முன்னேற்றம் அடைவீர்கள்.
Read more – IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
கும்பம் :
வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உறவினர்கள் மூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும். நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
மீனம் :
வீட்டில் பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும்.