மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 26.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00 – 10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
வீட்டின் பெரியவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ரிஷபம் :
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். குல தெய்வ தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.
மிதுனம் :
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளின் மீது உள்ள அன்பால் புதிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த கடன்கள் அனைத்தும் குறையும்.
கடகம் :
குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களின் எதிர்பார்த்த உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் :
நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்பட்டு தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுப்பீர்கள். வருமானம் லாபகரமாக அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கன்னி :
பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கிடைக்கும். உடலில் காணப்பட்ட உடல் உபாதைகள் சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கூடும் .
துலாம் :
ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் வெளிப்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் தீரும் .
விருச்சிகம் :
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமலும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது .
தனுசு :
உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். தொழில் ரீதியான பிரச்சினைகளை திறம்பட எதிர்கொள்வீர்கள்.
மகரம் :
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். ஏற்கனவே வரவேண்டிய பழைய கடன்கள் வந்து சேரும்.
Read more – சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021
கும்பம் :
திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மீனம் :
பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நண்பர்களால் உண்டான சண்டைகளால் மனநிம்மதி கெடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்க முடியும். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை அளிக்கும்.