இன்றைய ராசிபலன் 27.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 27.12.2020, நல்ல நேரம் :காலை 7.45-8.45, மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 9.00- 10.30, எமகண்டம் நண்பகல் 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தீடிரென ஏற்பட வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக ஊழியர்களின் உதவியால் துரிதமாக பணியை முடிப்பீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை நிலவ பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்:

உடலில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பண விஷயங்களில் நண்பர்களிடம் தேவையான சிக்கனத்தை கடைபிடித்தல் நல்லது. பணியின் காரணமாக அலையும் போது தேவையான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக பணியாளர்களிடம் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றங்களை அடைவீர்கள்.

கடகம்:

தாய் மற்றும் தந்தை உறவுகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கும். புதிய வழிப்போக்கர்களிடம் பழகும்போது கவனமாய் இருத்தல் நல்லது. குழந்தைகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும்.

சிம்மம்:

தொழில் சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பயனை அளிக்கும். சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை நிலவும். கணவன் மற்றும் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.எதிர்பாராத செலவுகள் அதிகமாக ஏற்படும்.

கன்னி:

எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும்போது பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவதால் நன்மைகள் அளிக்கும். கணவன்-மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதால் இல்லறம் நல்லறமாக அமையும்.

துலாம்:

மிக நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் விரைவில் முடிவடையும். அலைச்சல் அதிகமாக ஏற்படும் போது பயணத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியான விஷயங்களில் தொடர் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதிய முதலீடுகள் புதிய தொழில் சிந்தனைகள் செயலாக்கும் நாள். தடை ஏற்பட்டு கொண்டிருந்த கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு:

குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மனதளவில் மகிழ்ச்சி அழைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான தகவல்கள் வந்து சேரும். பணியின் காரணமாக உடல் ரீதியாகவும் மனதளவிலும் சோர்வு ஏற்படும்.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.

மகரம்:

எடுத்த காரியங்களில் துணிந்து செயல்படுவது நல்லது. தேவை இல்லாத அச்சத்தினால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நேரிடும். வெளியூர் பயணங்கள் இனிதாக நிறைவேறும். கடன் பிரச்சினை குறைவதற்கான அமைப்பு மேலோங்கும்.

Read more – எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

கும்பம்:

எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். சொந்தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி பந்தங்கள் தொடரும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் நீங்கி சந்தோஷமான மன நிலை உண்டாகும்.

மீனம்:

பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மனதளவில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல பெற வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.

Exit mobile version