மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வியாழன் கிழமை தேதி 29.04.2021, நல்ல நேரம் :காலை 10.30 -11.30, மாலை 12.30 – 1.30, ராகுகாலம் காலை 1.30 -3.00 , எமகண்டம் காலை 6.00 – 7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
எடுக்கும் காரியங்களை தீர யோசனைக்கு பின்பு நடத்தி முடிப்பீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்கலாம்.
ரிஷபம் :
குடும்பத்தில் தாராள செல்வ வளம் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
மிதுனம் :
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் நாளாக அமையும். வெளியூர் பயணம் சென்று உயரதிகாரியிடம் நட்பை பாராட்டுவீர்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
கடகம் :
உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத கடன் உதவி வாங்கும் நிலைமை ஏற்படலாம் . பிறரை நம்பாமல் பொறுப்புடன் நீங்கள் தொழிலை கையில் எடுப்பது நல்லது.
சிம்மம் :
குடும்பத்தில் பெரியவர்களுடன் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக பணவரவு சுமாராக தான் இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும்.
கன்னி :
குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும் உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். நீங்கள் எதிர்பாராத வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்களை தேடி வரும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு :
தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் அறிமுகம் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம் :
குடும்பத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் :
குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.
மீனம் :
உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.