இன்றைய ராசிபலன் 29.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய்கிழமை தேதி 29.12.2020,நல்ல நேரம் :காலை 7.45-8.45,மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 3.00- 4.30,எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

திருமணம் போன்ற சுபகாரியங்க நிகழ்ச்சிகள் கைகூடும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்த மாதிரி செயல்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது.தேவையில்லாத செலவினங்களை சந்திக்க நேரிடும். சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும்.

ரிஷபம்:

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் நேரிடலாம். பணியிடச் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.

மிதுனம்:

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பணியிடச் சூழல் அதிருப்தியை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

கடகம்:

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பணியில் வளர்ச்சி காணப்படும்.உங்களின் பணிக்காக மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகமாக காணப்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறைய வாய்ப்பு அமையும்.

சிம்மம்:

இன்று மனத்தெளிவுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி:

குடும்பத்தில் அமைதி நிலை பரவும். பணத்தேவை பூர்த்தியாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

துலாம்:

ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் வீண் செலவுகளை தவிர்க்கலாம். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக பல சவால்களை எதிர்கொள்வீர்கள். பயணத்தின் பொழுது பணத்தை இழக்க நேரிடலாம் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்;

குடும்ப பெரியவர்களிடமிருந்து பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை.

தனுசு:

கணவன் மனைவியிடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டு அன்பு அதிகரிக்கும். உடல் நிலை ஆரோக்கியமாக காணப்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மகரம்:

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வந்தடையும். குழந்தைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அதிகமான பணிச்சுமை காரணமாக பணியில் மும்மரமாக இருப்பீர்கள். இக்கட்டான நிலைமையில் எதிர்பாராத பணஉதவி கிடைக்கும்.

Read more – இந்தியா அணி சிறப்பான பந்து வீச்சு : ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

கும்பம்:

உங்கள் அனுபவம் உங்களுக்கு தேவையான பாடத்தை கற்றுத் தரும்.ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவை இல்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

எடுத்த காரியங்கள் பாதியில் தடைப்படலாம். மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக மாற்றும். பணி சார்ந்த புதிய வாய்ப்புகள் வந்தடையும். .கணவன்-மனைவி இடையே உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு.

Exit mobile version