இன்றைய ராசிபலன் 30.01.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனி கிழமை தேதி 30.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

ரிஷபம் :

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாளாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மரைய கூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம் :

உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம் :

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க கூடும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

சிம்மம் :

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் அரங்கேறும். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு உண்டாகும் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் அமையும்.

கன்னி :

உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளித்தாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

துலாம் :

குடும்பத்தில் பணவரவு தாராளமாக அமைவதுடன் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் :

உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்தடையும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு :

உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் இருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் பணவிரயங்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Read more – சியோமியின் ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ : இனி காற்றிலேயே சார்ஜ்!

மகரம் :

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் இருக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

கும்பம் :

மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணி புரியும் இடத்தில காணப்பட்ட போட்டி, பொறாமைகள் நீங்கும்.

மீனம் :

தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக அமையும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பிறருக்கு அவரசத்திற்கு உதவிய தொகை தக்க சமயத்தில் கைக்கு வைத்து சேரும்.

Exit mobile version