இன்றைய ராசிபலன் 30.03.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 30.03.2021, நல்ல நேரம் :காலை 7.-30-8.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 3.00-4.30, எமகண்டம் மாலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். தொழில் காரணமாக ஏற்படும் பயணங்கள் நற்பலன்கள் உண்டாகும்.

ரிஷபம் :

பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:

குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும்.கணவன் மனைவியிடையே தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.

கடகம்:

உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் என்பது குறைவாகவே இருக்கும். வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்:

முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு பெருமை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் கிட்டும்.

கன்னி:

வெளியில் செல்லும் போது குடும்ப உறுப்பினர்களிடம் இனிமையான பேச்சை வளர்த்து கொள்வது நல்லது. எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

துலாம்:

பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வரவு கணக்குகளில் கண்டிப்பாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:

குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தனுசு:

பெண்கள் சற்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

மகரம்:

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

கும்பம்:

எதையும் சற்று நிதானித்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடலளவிலும் மனதளவிலும் சோர்வாக காணப்படுவீர்கள். நிதி சம்பந்தமான முதலீடுகள் செலுத்தப்படும் போது அதற்குரிய ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.

மீனம்:

வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் அன்பை பெறுதல் நல்லது. நீண்ட நாள் போராடியதன் விளைவு இன்று வெற்றி அளிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள்.

Exit mobile version