இன்றைய ராசிபலன்!!!

இன்று திங்கள் கிழமை தேதி 31.08.2020, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை10.30.12.00 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று நம்பிக்கை உணர்வு நிறைந்து அதிகமாக காணப்படும். இதனால் உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும்.

ரிஷபம்

உங்கள் முயற்சிகளில் வெற்றி காண பெற கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். கடினமான சூழ்நிலையை சமாளிக்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்மறையான சிந்தனை தோன்றலாம். இன்று மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லதாகும். அனைவரையும் அனுசரித்து விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.

கடகம்

இன்று மிகவும் துடிப்பான நாளாக இருக்கும். உங்கள் லட்சியங்களை அடைவதில் வெற்றி காண்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் மிகச்சரியான முடிவெடுப்பீர்கள்.அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். முயற்சியின்றி உங்கள் புத்திசாலித்தனம் மூலம் வெற்றி எளிதாக உங்களை வந்து அடையும்.

கன்னி

இன்று நீங்கள் சற்று பதட்டமாக காணப்படுவீர்கள் அதனால் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் சற்று யோசித்து செய்வது நலம் பயக்கும். நீங்கள் உற்சாகமாக இருந்து சவால்களை சந்திக்க வேண்டும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் அமைதி பெறலாம்.

துலாம்

இன்று முக்கிய முடிவுகளை சற்று யோசித்து முடிவெடுங்கள்..? பொறுமையை கையாள்வதன் பல வித நன்மைகள் உங்களுக்கு வந்தடையும். மேலும் இறைவனை பிராத்திபதன் மூலம் இன்றைய நாள் உங்கள் நாளாக அமையும்.

விருச்சிகம்

உங்களின் வளர்ச்சி குறித்த முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு இன்று அதிகம் உள்ளது. இன்று உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாள் உகந்தாகும்.

தனுசு

இன்று சற்று அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் நாள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு பயஉணர்வு ஏற்படலாம்.நல்ல பலன் பெற உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகும்.

மகரம்

இன்று விரும்பும் பலன் காண சாதகமான நாள். பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க எந்த செயலையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வேண்டும். இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

கும்பம்

சில எதிர்மறையான சிந்தனைகள் காரணமாக பாதுகாப்பின்மை உணர்வு காணப்படலாம். ஆனால் அதை நீங்கள் விவேகத்துடன் இந்தச் சவால்களை வெற்றி கான்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை அளிக்கும்.

மீனம்

சுய முயற்சி மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்று அதிகமாக உள்ளது. வெற்றி காண்பதற்கு உறுதியான அணுகுமுறைகள் உதவிகரமாக இருக்கும். உங்களின் இனிமையான வார்த்தைகள் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

Exit mobile version