இன்றைய ராசிபலன் 17.10.2020 …

இன்று சனிக்கிழமை தேதி 17.10.2020, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

உங்களின் சமயோசித புத்தி மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் சாத்தியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்

ரிஷபம்

இன்று அவநம்பிக்கையும் அமைதியின்மையும் காணப்படும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம்

மிதுனம்

இன்று மிதமான பலன்களே காணப்படும். சில பணிகள் நிலுவையில் நிற்கலாம். இன்றைய சவால்களை சந்திக்க சமநிலை போக்கு தேவை.

கடகம்

இன்று இனிமையான நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் செயல்களை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாளாகும்.

சிம்மம்

இன்று துடிப்பான நாளாக இருக்காது. இன்று பாதுகாப்பின்மை உணர்வு அதிகம் காணப்படும். இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கன்னி

இன்று சுமூகமான பலன்கள் கிட்டாது.உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும்.

துலாம்

இன்று சகஜமாகவும் நகைச்சுவை போக்கும் மேற்கொண்டால் நன்மை ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க இயலும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதலை பெறலாம்.

விருச்சிகம்

இன்று வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாள்.குறைந்த முயற்சியில் அதிக வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். இதனால் நன்மைகள் கிடைக்கும்.

தனுசு

இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று லாபகரமாக இருக்கும்.

மகரம்

இன்றைய நாள் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்பம்

இன்று அனுகூலமான நாளாக இருக்காது சில சமயங்களில் நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். நீங்கள் தைரியம் இழக்கும் வகையில் கடினமான சூழ்நிலை காணப்படும்.

மீனம்

இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும்.

Exit mobile version