இன்று புதன் கிழமை தேதி 14.10.2020, ராகுகாலம் பிற்பகல் 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று உங்கள் மனதில் ஏற்படும் பதட்டத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை எண்ணங்களை வளர்க்காதீர்கள். இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களால் சாதிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
ரிஷபம்
இன்றைய நாள் சாதகமாக இருக்காது. உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.
மிதுனம்
இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மனதில் தெளிவு இருக்கும். உங்கள் திறமைகளை அறிந்து அதனை சிறந்த தகவல் பரிமாற்ற முறையில் வெளிப்படுத்துவீர்கள்.
கடகம்
இன்றைய நாளை ஆன்மீக ஈடுபாட்டிற்கு பயன்படுத்துங்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு ஒன்றே உங்களுக்கு திருப்தி காண சிறந்த வழி ஆகும்.
சிம்மம்
இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியது வரும். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை பெறுதல் நல்லது. இதன் மூலம் நட்பின் சிறப்பையும் நீங்கள் உணர முடியும்.
கன்னி
இன்று காணப்படும் கடினமான சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வெற்றியை அளிக்கும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
துலாம்
இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் ஆர்வங்களை மேம்படுத்தும் பல வாய்ப்புகள் கிடைக்கும். பயனுள்ள முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
விருச்சிகம்
இன்று வளர்ச்சி காண்பீர்கள். கடினமான செயல்கள் கூட இன்று எளிதாகச் செய்வீர்கள். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
தனுசு
ஆன்மீக விழிப்புணர்வு இன்று உங்களுக்கு ஆறுதலையும் வளர்ச்சியையும் தரும். இன்றைய நாளை மகிழ்ச்சியாக நீங்கள் வழி தேடுவீர்கள். விரைவான முடிவுகளால் முன்னேற்றம் கிடைக்காது என்பதால் அதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மகரம்
இன்று ஆன்மீக விழா மற்றும் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு திருப்தியடைவீர்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவீர்கள். அது உங்களுக்கு மன ஆறுதல் தரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்களுக்கான பணிகள் கடினமாக இருந்தாலும் அதனை மிக எளிதாக முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். இசை மற்றும் மந்திரங்கள் சொல்வது மனதிற்கு ஆறுதல் மற்றும் அமைதி அளிக்கும். அதிர்ஷ்டம் காணப்படும்..