இன்றைய ராசிபலன்!!!

இன்று செவ்வாய் கிழமை தேதி 06.10.2020, ராகுகாலம் malai 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஆன்மீகம் சம்பந்தமான பயணங்கள் இன்று உங்களுக்கு ஆறதலையும் திருப்தியையும் அளிக்கும்..

ரிஷபம்

இன்றைய நாள் அவநம்பிக்கை உணர்வுகள் உங்களை வளரவிடாமல் தடுக்கும். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். கவனக்குறைவான பேச்சுக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. தியானம் மேற்கொள்வது பயனளிக்கும்

மிதுனம்

இன்றைய நாள் மகிழ்ச்சிக்கான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும் நாளாக அமையும். புதிய தொடர்புகள் உருவாக்குவதும் சமூகக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் உங்களை மன நிம்மதி அளிக்கும்.

கடகம்

இன்று மிகவும் துடிப்பான நாளாக இருக்கும். உங்கள் லட்சியங்களை அடைவதில் வெற்றி காண்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். இதனால் மிகச்சரியாக முடிவெடுப்பீர்கள்.அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிம்மம்

இன்றைய நாள் துடிப்பான நாளாக இருக்கும். இன்று சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். உங்களிடம் தலைமை பொறுப்பிற்கான தகுதி காணப்படும். அதனால் உங்கள் தகுதி உயரும்.

கன்னி

உங்கள் செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களில் வெற்றி பெற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல.

துலாம்

இன்று சற்று மந்தமாக காணப்படும். இன்று உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது மிகவும் அரிது. இதனால் குழப்பமான மனநிலையே காணப்படும்..

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி இன்றைய நாளை அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள்.

தனுசு

இன்று வேலைகளை எளிதாகச் செய்ய முடியாத அளவிற்கு சற்று கடினமான சூழ்நிலை காணப்படும். திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றி காணலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம்

இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் நடைமுறை அணுகுமுறையை கையாள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் சோர்வை வென்று நம்பிக்கையுடன் இன்று செயல்படலாம்.

கும்பம்

இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். இன்றைய விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது சிறந்தது.

மீனம்

மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். ஆன்மீக காரியங்களில் நேரத்தை செலவழிப்பதன் மூலம் உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.

Exit mobile version