இன்றைய ராசிபலன்….

இன்று சனிக்கிழமை  தேதி 03.10.2020, ராகுகாலம் காலை     9.00-10.30, எமகண்டம் பிற்பகல்       1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று மந்தமாக  இருப்பீர்கள் . உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும் எனவே நனறாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது.

ரிஷபம்

இன்று  ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.

மிதுனம்

உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று அமைதியுடன் காணப்படுவீர்கள். சில பயனுள்ள காரியங்களை செய்வீர்கள்.

கடகம்

இன்று பணிகள் அதிகமாக காணப்படும். நல்ல செயல்திறனுடன் பணியாற்ற நீங்கள் கூடுதல் முயற்சிகளை  எடுக்க வேண்டும்.

சிம்மம்

இன்று நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஏற்றம் இறக்கமாக காணப்படும். எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.

கன்னி

இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

இன்று பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோசஜித  புத்தியுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

சில ஆரம்ப கால தடைகளுக்குப் பின் உங்கள் இலக்குகளை பூர்த்தி செய்வீர்கள். இதற்கு சில கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் எளிதில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்களின் அமைதியான மனநிலை காரணமாக நீங்கள் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம்

உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது அவசியமாகும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மீனம்

உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது நல்லது.

Exit mobile version