இன்றைய ராசிபலன்….

இன்று புதன் கிழமை தேதி 30.09.2020, ராகுகாலம் பிற்பகல் 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பொறுப்புகள் இன்று அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்றுநீங்கள் உறுதியான மனநிலையில் இருப்பீர்கள். நீங்களாக முடிவெடுப்பீர்கள்

கடகம்

இன்று முற்போக்கான வளர்ச்சிகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க நேரிடலாம். அது உங்களுக்கு தக்க பலன்களைத் தரும்.

சிம்மம்

இன்று அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை தேவை. தெய்வீகப் பாடல்கள் கேட்பது மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். நீங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றிகளை காணலாம்.

துலாம்

உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்று திருப்தி கிடைக்கும்

விருச்சிகம்

இன்று சிறிது பதட்டம் காணப்படும். அதிக சௌகரியங்களை அனுபவிக்க இயலாது. நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். அமைதியின்மை உணர்வை தவிர்ப்பது நல்லது.

தனுசு

இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். சௌகரியமாக இருக்க இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.

மகரம்

தினசரி செயல்களை மேற்கொள்ளும்போது யதார்த்தமான அணுகுமுறை வேண்டும். பெரிய அளவில் செயல்கள் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் அதிக பலன்களை பெறுவீர்கள்.

மீனம்

உங்கள் வழக்கமான பணிகளை கவனமாக முறையாக கையாள வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக நிகழ்சிகளில் ஈடுபதுவது நல்ல பலன் அளிக்கும்.

Exit mobile version