இன்று வியாழக்கிழமை தேதி 03.09.2020, ராகுகாலம் பிற்பகல் 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
இன்று அதிக பயணங்கள் காணப்படும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் திட்டமிட்டு செயலாற்றுவது நல்ல பலன் தரும்.குடும்பத் தேவைக்காக இன்று பணம் சில செலவு செய்வீர்கள்.
ரிஷபம்
இன்று சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் சொத்து உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் .இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது சிறந்ததாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், உங்களின் இனிமையான தகவல் தொடர்பின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள்.இன்று தேக ஆரோக்கியம் வலிமையாக இருக்கும்.
கடகம்
இன்று புனிதமான மற்றும் ஆன்மீக யாத்திரைகளுக்கு இது உகந்த நாளாகும். ஏழைகளுக்கு உணவு அளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் பல நன்மைகள் பெறலாம்.
சிம்மம்
ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பதட்டம் காரணமாக சில அசௌகரியங்கள் காணப்படும் .
கன்னி
இன்று உங்களுக்கு பல வெற்றிகள் கிடைக்கும் நாள். புதிய தொடர்புகள் மற்றும் நட்பு வட்டம் பெருகும்.இது உங்களுக்கு சிறந்த நாளாக அமையும்.
துலாம்
இன்று அதிக வேலைப்பளு இருக்கும். உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் நன்மைகள் நடக்கும்.உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் சில இடத்தில் கடன் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் அதித முயற்சி எடுக்க வேண்டும். சுப காரியங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.நிதி நிலைமை மகிழ்க்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் கவலையை உருவாக்கும்.
தனுசு
இன்றைய நாளை இசை கேட்பது, தொண்டு செய்வது, தன தருமங்கள் செய்வது போன்ற ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
மகரம்
இன்று எதிர்பாராத நன்மைகள் உங்கள் வாயிற்கதவை தட்டும். நீங்கள் பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம்.இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கலாம் . தோள் வலி மற்றும் சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
உங்கள் தவகல் தொடர்பு வல்லமை மூலம் சிறந்த பலன்களைக் காணலாம். உங்கள் திறமைகளை மேம்படுத்த இன்றைய நாளை பெரிதும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மீனம்
உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரிடலாம். இதனால் உங்களின் பணிகள் எளிதாக முடிப்பதை கூட நீங்கள் கடினமாக உணர்வீர்கள்.