இந்தியாவில் களமிறங்கிய ஆடி க்யூ2 எஸ்யூவி கார்.. விலையும் கம்மி தான்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் க்யூ2 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் புதிய ரக கார்களின் வரிசையில், அடுத்த படைப்பு ஆடி நிறுவனத்தின் க்யூ2 எஸ்யூவி கார்.

ஐந்து வித ட்ரிம்களில் இருவித பாடி-லைன்களில் கிடைக்கும் ஆடி க்யூ2 கார், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இதன் விலை பானரோமிக் சன்ரூப் மாடல் விலை ரூ. 1.50 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த காரின் தொடக்க விலை ரூ. 34.99 லட்சம் எனவும், ப்ரீமியம் மாடலின் விலை ரூ.40.43 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி நிறுவனத்தின் இந்த புதிய கார் மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி முகப்பு விளக்குகள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாடலில் உள்ள என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் கொண்ள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version