ஸ்ப்லெண்டர் ப்ளஸ் BS6 பைக்கின் விலையில் மாற்றம் – ஹிரோ நிறுவனம் அறிவிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 பைக்கின் விலை மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் புதிய வரைமுறைகளுக்கு ஏற்றவாறு , BS6 தரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது ஹிரோ நிறுவனத்தின் ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 பைக். இதன் விலை முதன்முறையாக கடந்த மே மாதத்தில் 750 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால், வாகனத்தின் அமைப்பிலோ, பாகங்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 பைக்கின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வின் படி ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 மாடல் விலை ரூ. 60,500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தற்சமயம் ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 மாடல்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும், ரூ.150 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில், Splendor Plus Kick Start: ரூ.60,350லிருந்து ரூ. 60,500 ஆக உயர்ந்துள்ளது. Splendor Plus Self Start: ரூ.62,650லிருந்து ரூ.62,800 ஆகவு, Splendor Plus Self Start i3S: ரூ.63,860லிருந்து ரூ.64,010 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட, அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்ப்லெண்டர் பிளஸ் BS6 மாடலில் 97.2சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.8 பிஹெச்பி பவர், 8.05நம் டார்க் செயல்திறன் கொண்டுள்ளது.

Exit mobile version