எலெக்ட்ரிக் வாகனங்களின் வரிசையில் ஹஸ்க்வர்னா ஸ்கூட்டி..அசத்தும் அவுட்லுக்

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாடலின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது. அதன்படி அனைத்து முன்னணி நிறுவனங்களும் கார், பைக் என அனைத்து வாகனங்களிளும் எலெக்ட்ரிக் மாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

அதன்படி, ஹஸ்க்வர்னா நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் செட்டாக் மாடல் உருவான பிளாட்பார்மில் உருவாக உள்ளது.

இதனால் புதிய ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Exit mobile version