ஹோண்டா நிறுவனம் தனது புதிய மாடலான லிவோ BS6 டிஸ்க் பிரேக் பைக்கின் விலையை வெளியிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் லிவோ BS6 வேரியண்ட் இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் விலை ரூ. 70,056, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ள லிவோ BS6 டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலை ரூ. 74,256, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டிரம் பிரேக் வேரியண்ட்டில் முன்புறம் 130 எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் 240 எம்எம் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் சிபிஎஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது லிவோ மாடலில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை வழங்கி உள்ளது. இந்த பைக்குகளில் 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.6 பிஹெச்பி பவர், 9.3 Nம் டார்க் செயல்திறன் கொண்டுள்ளது.