599 சிசியுடன் அசத்தல் அம்சங்கள்..2021 CBR600RR சூப்பர் ஸ்போர்ட் பைக்

ஹோண்டா நிறுவனத்தின் 2021 CBR600RR மாடல் சூப்பர் ஸ்போர்ட் பைக்கிற்கான அதிகாரப்பூர்வ புரோமோ வெளியிடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் தனது CBR1000RR-R ஃபயர்பிளேடு மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கி இருந்தது. அதைதொடர்ந்து தற்போது,2021 CBR600RR மாடலுக்கான அதிகாரப்பூர்வ புரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின்படி, STYLING CBR1000RR-R மாடலை தழுவி புதிய மாடலின் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புதிய பைக்கில் மெல்லிய எல்இடி ஹெட்லைட் மற்றும் மேம்பட்ட கலர் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடல்களை போன்றே புதிய மாடலிலும் அன்டர்-சீட் எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங் மட்டுமின்றி இவற்றின் என்ஜின் புதிய எமிஷன் விதிகளுக்கு பொருந்துவதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் 110 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது. 2021 CBR600RR பைக் மாடலில் 599 சிசி திறனுடன் கூடிய இன்லைன் 4 சிலிண்டர் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://youtu.be/lSvf-XbVWl8

மேலும், ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல்லி டிஜிட்டல் டிஸ்ப்ளே, அப்சைடு டவுன் டெலிஸ்கோபிர் ஃபோர்க்குகள், பின்பகுதியில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், முன்பகுதியில் ட்வின் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட உள்ளது. 

2021 ஹோண்டா CBR600RR பைக் மாடல் முதற்கட்டமாக ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாடல் இந்தியா வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version