கண்ணை கவரும் ஹோண்டா சிவிக் கார்கள்!

ஹோண்டா சிவிக் செடான் காரின் பிஎஸ்-6 டீசல் இன்ஜின் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. 

விஎக்ஸ், இசட்எக்ஸ் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ற 1.5 லிட்டர் ஐடிடிஇசி டர்போ டீசல் இன்ஜின், 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். பிஎஸ்-6 தரத்திலான இன்ஜின் என்பதால், எரிபொருள் சிக்கனத்துடன் நல்ல மைலேஜ் தரும். ஒரு லிட்டருக்கு 23.9 கி.மீ., மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோம் கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி அலாய் வீல், 6 ஏர்பேக்குகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போ டெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார் பிளே இயக்கும் வசதி, எலக்ட்ரிக் சன்ரூப், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரியர்வியூ கேமரா, பிரேக் அசிஸ்ட் சிறப்பம்சம். விஎக்ஸ் வேரியன்ட் – ரூ. 20.75 லட்சம். இசட்எக்ஸ் வேரியன்ட் – ரூ. 22.35 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version