மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 எனும் புதிய வேரியண்ட் கார், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி மாடல்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தற்போது கேயுவி100 வேரியண்ட் கார் வெவ்வேறு வண்ணங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மஹிந்திரா மோனோ டோன் மாடல் பியல் வைட், டேஸ்லிங் சில்வர், பிளேம்பொயன்ட் ரெட், பியரி ஆரஞ்சு, டிசைனர் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
அதைத்தொடர்ந்து, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேயுவி100 என்எக்ஸ்டி மாடல் டூயல் டோன் பெயின்ட்டிங்கில் கிடைக்கிறது. அந்த வகையில் புதிய கார் சில்வர் \ பிளாக் மற்றும் ரெட் \ பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
டூயல்-டோன் ஆப்ஷன் டாப் எண்ட் கே8 மாடலில் வழங்கப்படுகிறது. மேம்பட்ட கேயுவி100 டூயல் டோன் மாடல் தொடக்க விலை ரூ. 7.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 7500 வரை விலை அதிகம் ஆகும்.
இந்திய சந்தையில் மஹிந்திரா கேயுவி100 கே2 பிளஸ், கே4 பிளஸ், கே6 பிளஸ் மற்றும் கே8 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் எம்பால்கன் ஜி80 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 82 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.