அடிச்சு தூக்கிய மஹிந்திராவின் புதிய தார்.. முன்பதிவில் புதிய சாதனை

மஹிந்திரா நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள தார் மாடல் கார் முன்பதிவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக அக்டோபர் மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.

புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இரு வேரியன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிய தார் மாடல் முன்பதிவில் 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. புதிய தார் மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய மூன்றரை மாதங்கள் எனும் குறுகிய காலக்கட்டத்தில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதிய தார் மாடல் வாங்கியவர்களில் 57 சதவீதம் பேர் முதல்முறை கார் வாங்குவோர் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

Exit mobile version