இந்தியாவிற்கு வந்த ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்..5 மாடல்களில் அட்டகாசமான அவுட்லுக்

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார், இந்திய சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த காரின் புதிய வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளதோடு, ஐந்து ட்ரிம்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 154 பிஹெச்பி பவர், 254 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி யூனிட் அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் கிரில், முன்புற பம்ப்பர், ரூஃப் ரயில்கள், ஃபாக் லேம்ப் கிளஸ்டர் மற்றும் டெயில் கேட் எம்பெலிஷர் உள்ளிட்டவைகளில் க்ரிம்சன் ரெட் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கார் பாடியின் நிறத்திற்கு ஏற்றவாறு ஒஆர்விஎம்கள், புதிய 17 அங்குல அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரிம்கள் முறையே லிட்டருக்கு 16.5 கிலோமீட்டரும், 16.42 கிலோமீட்டரும் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

5 ட்ரிம்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை ரூ. 10.49 லட்சத்தில் தொடங்கி டாப் எண்ட் மாடல் வேரியண்ட் விலை ரூ. 13.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Duster 1.3 turbo petrol RXE MT விலை- ரூ. 10.49 லட்சம்

Duster 1.3 turbo petrol RXS MT விலை- ரூ.11.39 லட்சம்

Duster 1.3 turbo petrol RXZ விலை – ரூ.11.99 லட்சம்

Duster 1.3 turbo petrol RXS CVT விலை- ரூ.12.99 லட்சம்

Duster 1.3 turbo petrol RXZ CVT விலை – ரூ.13.59 லட்சம்

Exit mobile version