அடேங்கப்பா..அப்டேடட் மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்..விலை தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடம்பரத்துடன், சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் , புதிய கோஸ்ட் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் வடிவமைப்பில், முந்தைய காரில் இருந்து எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய காரில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிகபட்ச சவுகரியத்தை வழங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. கோஸ்ட் ரக கார்களின் முதல் மாடல் கடந்த
2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 11 ஆண்டுகள் கழித்து கோஸ்ட் ரக கார் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய கோஸ்ட் ரக காரில் முற்றிலும் புது என்ஜின், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. புதிய கோஸ்ட் மாடலின் விலை ரூ. 6.95 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 563 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6.7இன்ச் அளவிற்கு மேம்படுத்தப்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version