ராயல் என்பீல்டின் புதிய meteor 350 மாடல் பைக்.. 3 வேரியன்ட்களில் பல்வேறு சிறப்பம்சங்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய பைக் மாடலான meteor 350, விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்திய பைக் பயனாளர்கள் இடையே, ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு என ஒரு தனி அடையாளம் உண்டு. அதன் காரணமாகவே, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதற்கான பயனாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு புதிய மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுப்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாத சமயத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த அந்நிறுவனத்தின் புதிய Meteor 350 எனும் பைக் மாடல் வெளியீடு, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி உள்ளது.

இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் தனது Meteor 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போதையை தகவல்களின் படி, புதிய ராயல் என்ஃபீல்டு Meteor 350 பைக் செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த பைக், 350 மாடல் தண்டர்பேர்டு எக்ஸ் ரக மாடல்களுக்கு மாற்றாக வெளியிடப்படும் என தெரிகிறது.

முந்தைய மாடலை விட ராயல் என்ஃபீல்டு Meteor 350 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த பைக் J1D எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய தளத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் fireball, steller மற்றும் Super Nova என மூன்று வேரியன்ட்களில் வெளியாக உள்ள இந்த பைக்குகள், Fireball yellow, Fireball red, Stellar red metallic, Stellar black matte, Stellar blue metallic, Supernova brown dual-tone and Supernova blue dual-tone என ஏழு வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

இந்த பைக்கில் டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.
BS6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கபடுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 Nmடார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்சும் புதிய ரக பைக்கில் வழங்கப்படுகிறது.

Exit mobile version