அதுவா இது?..மாடிஃபைங்கில் மாறிப்போன ராயல் என்பீல்ட் கிளாசிக் 500..612 சிசிக்கு அப்கிரேட்..

பிரபல ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக் ஒன்றின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ரேஸ் பைக்கை போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பைக் பிரியர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் ராயல் என்பீல்ட் நிறுவன பைக்குகளை மிகுந்த மிகுந்த ஆர்வத்துடன் வாங்குவது மட்டுமின்றி, அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்காக அதிகளவில் அவற்றை மாடிஃபை பணிகளுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வஜ்ரா என்பவரின் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 500 பைக்கின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த மாடிஃபை பைக்கின் புகைபடங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவை சேர்ந்த சைக்கிள் சிட்டி கஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதிக நேர்த்தியான கஸ்டமைஸ்ட் பணிகளால் கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு அந்த பைக் அட்டகாசமான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் பின்புற பகுதி பளபளப்பான அலுமினிய நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இருக்கை மற்றும் சேசிஸிற்கு சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

ஹேண்டிலிங்கிற்காக பின்பக்க சப்-ஃப்ரேம் மற்றும் ஸ்விங்க் ஆர்ம் உள்ளிட்டவற்றின் வடிவம் ஹ், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் போன்ற மற்ற பாகங்களும் கூட மாடிஃபை செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இத்தகைய மாற்றங்களால் தற்போது அந்த ராயல் என்பீல்ட் பைக், கேடிஎம் நிறுவனத்தின் முன்புற ஃபோர்க்கையும், பின்புறத்திற்கு மோனோஷாக்கையும் பெற்றுள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன்புற டிஸ்க் ப்ரேக் சற்று பெரியதாகவும், பின்புறத்தில் ஸ்டாக்கின் ட்ரம் ப்ரேக், டிஸ்க் ப்ரேக்காலும் மாற்றப்பட்டுள்ளது.

ரேஸ் பைக்கிற்கு ஏற்றவாறு ஹேண்டில்பார் மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானதாக 500சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை 612சிசி-ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வழக்கமான 500சிசி என்ஜின் வெளிப்படுத்தும் 27.2 பிஎச்பி, 40 பிஎச்பி ஆக இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் அதிகரித்துள்ளது. மற்ற அப்கிரேட்களாக கே&என் ஏர் பில்டர், அதிக அழுத்ததில் பிஸ்டன்கள், டைனோஜெட் பிசி5-இன் இசியூ, குவிக் ஷிஃப்டர், கஸ்டம் எக்ஸாஸ்ட் போன்றவை பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களால் பைக்கின் மொத்த எடை சுமார் 43கிலோ குறைந்து 154 கிலோவாக உள்ளது. ஆற்றல்மிக்க என்ஜின் அமைப்புடன் பைக்கின் எடையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் பைக் அதிகப்பட்சமாக 180kmph வரையில் இயங்கும் என உரிமையாளர் வஜ்ரா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version