பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியாகிறது ஹூண்டாய் ஐ20 மாடல்.. புதிய கூடுதல் அம்சங்கள் என்னென்ன?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் அடுத்த மாதம் வெளியாக உள்ள, ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் சிறப்பு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் பல்வேறு மோட்டார் நிறுவனங்களும், தங்களது புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருக்கின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடலை இந்திய சந்தையில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும், 2020 ஹூண்டாய் ஐ20 மாடல் காரில் கேஸ்கேடிங் கிரில், மெல்லிய முகப்பிலு விளக்குகள், ராப்-அரவுண்ட் பிரிக்க கூடிய டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் வீல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புது டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்க்ரீன்டச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பிற்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் மேலும் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் கார் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விற்பனையகம் வந்தடைந்துள்ள 2020 ஹூண்டாய் ஐ20 மாடல் காரின் முன்பதிவு கட்டணம் ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.  அதற்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி போன்ற டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Exit mobile version