முன்பணமே வேண்டாம்..இஎம்ஐ ரூ.5999 மட்டுமே..டாடா நெக்சான் காருக்கு அதிரடி சலுகை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, நெக்சான் மாடல் காருக்கு மிக குறைந்த மாத தவணை முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உலக அளவிலான ஆட்டோமொபைல் சந்தை பெரும் சரிவை சந்துத்துள்ளது. உரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, தனது நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு மிக குறைந்த மாத தவணை முறை வசதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி மாத தவணையாக வெறும் ரூ. 5999 மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய மாத தவணை கட்டணம் முதல் ஆறு மாதங்களுக்கு பொருந்தும். பின் கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டும். இதற்கான தவணை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். கடன் முடியும் தருவாயில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ரி-பைனான்ஸ் சலுகைகையும் வழங்குகிறது.

இதுதவிர முழு ஆன்ரோடு கட்டணத்திற்கும் கடன் வழங்குவதோடு முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் டாடாவின் இதர மாடல்களை தேர்வு செய்யும் போது முதல் ஆறு மாதங்களுக்கு மாத தவணையில் செலுத்துவதில் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் டாடா நெக்சான் மாடல் துவக்க விலை ரூ.6.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.12.70 லட்சம் ஆகும்.

Exit mobile version