டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான படைப்பு.. வெளியீட்டு விவரங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல், எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பல்வேறு புதிய வடிவமைப்புகளை வெளியிடுவது ஒத்திவைக்கபட்டது. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, பல நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் வாகனங்களை, பண்டிகை காலத்தை மையப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் டாடா மோட்டார்ஸ்
நீறுவனம், புதிய என்ட்ரி லெவல் மினி எஸ்யுவி மாடலை ஹெச்பிஎக்ஸ் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடலின் கான்செப்ட் வடிவத்தை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
காட்சிக்கு வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெச்பிஎக்ஸ் என்கிற ஹான்பில் மாடல் காரை, கொரோனா காரணமாக ஏற்க்கனவே திட்டமிட்டிருந்த சூழலில் வெளியிட முடியாததால், 2021 மே மாத மாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் ஸ்பை படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.  ஸ்பை படங்களில் இந்த காரின் பெரும்பாலான அம்சங்கள் தெரியவந்து இருக்கின்றன. புதிய டாடா கார் அந்நிறுவனத்தின் ஆல்பா ஆர்கிடெக்ச்சர் மற்றும் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் டிமெரோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version