தீபாவளிக்கு ரிலீசாகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டெயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் ரக எஸ்யூவி வரும் தீபாவளி பண்டிகையொட்டி விற்பனைக்கு வருவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

கார் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், மாருதி சுஸுகி – டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன்படி, முதலீடுகளை குறைத்து, கார் வர்த்தகத்தில் அதிக லாபத்தை ஈட்டும் வகையிலான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், மாருதி பிராண்டில் விற்பனையாகும் கார்களை டொயோட்டா நிறுவனமும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்கின்றன.

கொரோனா பிரச்னை காரணமாக, டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரும் அக்டோபரில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வர இருக்கிறது. வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. மாருதி சுஸுகி லோகோவுக்கு பதிலாக டொயோட்டா லோகோ இடம்பெற்றிருக்கும். இதற்காக, மிகச் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட் வசதி, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும்.

Exit mobile version