உபெர் நிறுவனத்தின் புதிய சேவை..ஆட்டோவை இனி இப்படியும் பயன்படுத்தலாம்..

உபெர் நிறுவனம் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், ஆட்டோ ரென்ட்டல்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

வாடகைக் கார் சேவை மூலம் இந்தியாவில் கால்பதித்த உபெர் நிறுவனம் அதை தொடர்ந்து உணவு டெலிவரி செய்யும் சேவையை மேற்கொண்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அதில் வெற்றி பெற முடியாததால், உணவு டெலிவரி செய்யும் சேவையை கைவிட்டு போக்குவரத்து துறையில் மட்டும் தனது முழு கவனத்தை செலுத்த தொடங்கியது.

அந்த வகையாக தற்போது ஆட்டோ ரென்ட்டல்ஸ் எனும் புதிய சேவையை உபெர் நிறுவனம் அறிமுகபடுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 149 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

புதிய சேவை மூலம் அடிக்கடி தனி ரைடுகளை முன்பதிவு செய்து பயணிக்கும் இன்னல் குறைந்து, பலமணி நேரங்களுக்கு பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது அதிகபட்சமாக எட்டு மணி நேரத்திற்கு ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்ப் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த சேவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பை மற்றும் டெல்லி என ஆறு நகரங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆட்டோ ரென்ட்டல்ஸ் சேவையை பயன்படுத்த முதலில், ஏற்கனவே பயன்படுத்தி வரும் உபெர் செயலியை அப்டேட் அல்லது புது வெர்ஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். உபெர் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.

Exit mobile version