Site icon SeithiAlai

தங்கம் விலை சரிவு…சவரனுக்கு ரூபாய் 160 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனையாகிறது.

இந்தியாவை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வர். எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத் தலைவிகள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்தது. இன்றும் சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 35,616-க்கு விற்பனை. கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து 4,452 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 69,100-க்கு விற்பனையாகிறது.

Exit mobile version