வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.50% உயர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரெப்போ ரேட் உயர்வு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.9% இருந்து 5.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி உயர்வை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டிவிகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, 2022-2023ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும் என்றும் 2023-2024ம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Exit mobile version