கூரியர், பார்சல் கட்டணங்கள் உயர்வு

செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயரவுள்ள நிலையில் பிரபல நிறுவனங்கள் பார்சல் & கூரியர் கட்டணங்களை ₹30 முதல் ₹300 வரை உயர்த்தியுள்ளன.

தமிழகத்தின் முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்களுக்கு இடையே பார்சல், கூரியர்  அனுப்பும் சேவைகளில் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், செப்டம்பர் 1முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளதால், கூடுதல் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் இந்த நிறுவனங்கள் பார்சல் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அதன்படி, 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் ₹150ல் இருந்து ₹170 ஆகவும் (400 கி.மீ வரை), ₹170ல் இருந்து ₹200 ஆகவும் (600 கி.மீ வரை) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 100 கிலோ வரை ₹50 ல் இருந்து ₹150 ஆகவும், 100 கிலோவுக்கு மேல் 1 டன் வரை ₹300 முதல் ₹800 வரை (தூரத்தின் அடிப்படையில்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் கவருக்கு ₹10, வெளியூர் பார்சலுக்கு ₹15, வெளிமாநில பார்சலுக்கு ₹30 என எடைக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

Exit mobile version