அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும் ₹10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு ₹3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ₹6.60 கோடியை பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்கள் மூலமாக வசூலிக்க வேண்டும்.
இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.