லாபத்தை அள்ளிய ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

தனியார் துறை வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி, தனது முதல் காலாண்டு அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நிகரலாபம் 36 சதவீதம் ஏற்றம் கண்டு, 2,599 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 1,908.03 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வங்கியின் கருவூல வருமானம் காரணமாக கடனளிப்பவரின் நிகர லாபம் அதிகரித்தது தான் காரணம் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் முக்கிய வருமானமாக கருதப்படும் வட்டி வருவாயானது 20 சதவீதம் அதிகரித்து, 9,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7,737 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிகர வட்டி மார்ஜின் தொகையானது 3.69 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் 3.87 சதவீதமாக இருந்தது.

அதிகளவிலான பணப்புழக்கம், டெபாசிட் வரவு அதிகரிப்பு, அதே சமயம் கொரோனா காரணமாக கடன் வழங்குதல் வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த விகிதத்தில் எதிரொலித்துள்ளது. இதே இந்த வங்கியின் சொத்து மதிப்பானது சற்றே அதிகரித்துள்ளது. மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 40,386 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 45,763 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே மொத்த வாராக்கடன் விகிதம் 5.46 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 5.53 சதவீதமாக இருந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் கடன் வளர்ச்சி 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே டெபாசிட் வளர்ச்சி 21 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆர்பிஐயின் கடனுக்கான கால அவகாசமும் 17.52 சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 30% அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவானது சனிக்கிழமையன்று வெளியான நிலையில், இதன் எதிரொலி திங்கட்கிழமையன்றும் எதிரொலிக்கலாம்.

Exit mobile version