பொருளாதாரத்தை மீட்டெடுக்க, உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை முடக்கி விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சிஐஐ கூட்டத்தில் பங்கேற்ற சக்தி காந்த தாஸ், அவரின் உரையின் போது பெரிய முதலீடுகள் தேவைப்படும் உள்கட்டமைப்பை வளர்ப்பதில், தனியார் மற்றும் பொதுத்துறைகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு இடம், பொருளாதாரத்திற்கு ஒரு உந்து சந்தியாக செயல்படக்கூடும். சமீபத்திய விவசாய சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டதாகத் கூறிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இந்தத் துறை ஒரு பிரகாசமான இடமாக வளர்ந்து வருவதாகவும், பொருளாதாரத்திற்கு ஆதரவாக விவசாயத்துறை மாறுவதாகவும் கூறியுள்ளார்.
உலகளாவிய மதிப்பு சங்கிலி பங்கேற்பில், 1 சதவீதம் அதிகரிப்பு, நாட்டின் தனி நபர் வருமான அளவினை 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த முடியும் என்றும் தாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளுடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக முடிப்பதோடு. பல வர்த்தக ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அன்னிய செலவாணி விகிதத்தினை பொறுத்த வரையில், ரிசர்வ் வங்கி ரூபாய்க்கு நிலையான இலக்கு என்பதை நிர்ணயிக்கவில்லை. ஆனால் ரூபாயின் ஏற்ற இறக்க மதிப்புகள் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலவி வரும் சவால்களுக்கு மத்தியில் தொழில்களுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை தயாராக மத்திய வங்கி உள்ளது. அதற்காக தயங்காது என்றும், மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் தாஸ் உறுதியளித்துள்ளார்.அதோடு மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு பணப்புழக்க நடவடிக்கையினால், கார்ப்பரேட் பத்திர சந்தையினை புதுபித்துள்ளன என்றும் தாஸ் கூறியுள்ளார்.
கார்ப்பரேட் பத்திர வழங்கலானது முதல் காலாண்டில் மட்டும் 1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகம் என்று தாஸ் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் விட நிலவி வரும் சவால்களை எதிர்கொள்ள வங்கிகளில் விரைவாக மூலதனத்தினை திரட்டவும் அறிவுறுத்தியுள்ளார்.