தீபாவளிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்காகத் தான்!!


இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி ஒருபுறம் இருக்க ஆன்லைன் நிறுவனங்கள் மீது வரும் புகார்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.



பண்டிகைக் காலமும் ஷாப்பிங்கும்:

பண்டிகை வந்தாலே 15 நாட்களுக்கு முன்பிருந்தே கடை வீதிக்கு போய் பொருட்களை தொட்டு, தடவி, சுவைத்து பார்த்து வாங்கிய காலம் மலையேறி வருகிறது. இப்போது அங்கே இங்கே அலையாமல் விரல் நுனியில் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பம்பர் ஆஃபர்களை வழங்கி வருகின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்:

ஷாப்பிங், கூட்ட நெரிசல், பேரம் பேசுதல் போன்ற எதைப்பற்றியுமே கவலைப்படாமல், வீட்டிலிருந்தபடியே சோப்பு முதல் வீடு வரையிலும் ஆர்டர் செய்து வாங்கி விடுகிறோம். அதிலும் டெபிட் கார்டுகளில் பணம் செலுத்தி ஏமாந்துவிட வேண்டாம், கேஷ் ஆன் டெலிவரி மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என உங்களை உசுப்பேத்தி, எல்லாவற்றையும் வாங்க வைத்துவிடுகிறார்கள். இதில் உள்ள ஆபத்துகள் தெரியாமல் பலர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். ஆன்லைனில் பணத்தை பறிகொடுப்பது மட்டுமல்லாமல் தேவை இல்லாத மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறிய தள்ளுபடிகளைக் கூட, நம்மை கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மூலம் நம்ப வைத்து, பெரிய அளவில் நமக்கே தெரியாமல் சில மோசடிகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாக பொருள் விற்பனை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அவதிக்குள்ளாக்கும் ஆன்லைன் ஷாப்பிங்:



எவ்வளவுக்கு எவ்வளவு வசதியும் நன்மைகளும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கிறதோ அதே அளவு தீமையும் இருக்கிறது. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. பொருட்களுக்கு பதிலாக செங்கல் வந்த கதையும் உண்டு .

ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே அவசியம். கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூபாய் 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் ரூபாய் 500-க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டி போட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தர மாட்டோம். அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் அந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம், வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்குக் கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம். ஏற்கனவே பணம் கட்டிவிட்டோம். எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.

மறைமுகக் கட்டணம்:

இன்னும் சில இணையதளங்கள் பாதி விலை என பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும் பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் என்ற பெயரில் அதிகமான பணத்தை கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை கண்டுகொள்ளவே கூடாது.

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால் கூட அதை கொண்டு வந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும்.

ஆன்லைனில் வாங்கும் பொருட்களை ரிட்டர்ன் செய்ய போறீங்களா?



பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால் அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்குத் தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல் போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.

பொருட்களின் விலை முறையானதா?

பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்து விடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது ரூ.200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது. பொருள் விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன.
பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

மின்னஞ்சல் பத்திரம்:

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை ரத்து செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். முதன்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

இன்னும் சில இணையதளங்கள் பாதி விலை, பொருந்தவில்லை எனில் 7 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம் போன்ற பல ஆஃபர்களை தருகின்றன. இதிலு ம், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் என்ற பெயரில் அதிகமான பண த்தை உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள். இதே போல, திடீரென இலவசபோன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந் தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

உண்மையாக வாடிக்கையாளர்களி ன்மீது அக்கறை கொண்டிருக்கும் தள ங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட் டணத்தையும்கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொரு ளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக் கூடாது.

பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலா ன தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடை யோ, காலணியோ வாங்கும்போது அளவு சரி யாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனு ப்பும் வசதி நமக்கு இருக்கவேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்ப தையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத்திரும்ப அனுப்பும்முன் நீங்கள் அதை சேதப்ப டுத்தாமல் இருக்க வேண்டும்.

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கிய மான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறி விட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெ ரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைக ளை ஏற்கெனவே சொல்லி இருக் கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

பொருள் விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். மிகஅதிக விலையு ள்ள பொருளை, மிகக்குறைந்த விலைக்கு விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

பொருட்களின் தரம்:

ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார் ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன.

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொரு ளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியா ன சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களு க்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

அதிரடிச் சலுகைகளைப் பார்த்து அவற்றை வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் நமது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போனவற்றின் விவரங்களைக் கொடுத்துவிடுவோம். இதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் போலி இணையதளங்கள் உங்கள் கார்டுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்துக்கொண்டு, கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துவிடுவார்கள். மேலும், இணையதளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில விளம்பரங்கள், நாம் ‘கிளிக்’ செய்யாமல் இருந்தாலும்கூட, அவை தானாகவே ஓப்பன் ஆகிவிடும். இவை உங்கள் கார்டுகளின் தகவல்களைத் திருடுவதற்கான யுக்தி .

நம்பத்தகுந்த இணையம் என்றாலும் கூட பொருட்களை வாங்கும்போது எப்போதும் ஒரே கார்டை பயன்படுத்துங்கள். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளீர்கள்; என்னென்ன பொருட்கள் வாங்கியுள்ளீர்கள்; எந்தத் தளத்திலிருந்து வாங்கியிருகிறீர்கள் என்று நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பழக்கமில்லாத அல்லது அதிகம் தெரியாததுமான இணையதள விளம்பரங்கள் வந்தால் அவற்றைப் புறக்கணிப்பதே மிகச் சிறந்தது.

கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு, நெட் பேங் கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லைஎன்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பை கேள்விகுள்ளாக்கும் இணையம்:



சில நேரங்களில் நாம் ஏதேனும் ஒரு ஷாப்பிங் மால்களிலோ அல்லது ஃப்ரீ வைஃபை கிடைக்கும் இடங்களிலோ நின்றுகொண்டிருக்கும்போது, நம்பத்தகுந்த இணையதளத்திலிருந்து நல்ல சலுகையை அறிவித்து இருப்பார்கள். நாமும் இது நம்பிக்கையான ஆன்லைன் வர்த்தகத்தளம்தானே? இதில், என்ன பிரச்னை வரப்போகிறது என்று அந்தப் பொருளை புக் செய்ய நினைத்தால், உண்மையில் நீங்கள் மாபெரும் ஏமாளிகளே! ஏனென்றால், அந்த நம்பத்தகுந்த ஆன்லைன் வர்த்தகத்தளம் உண்மையிலேயே உங்களுக்குச் சிறந்த சலுகையை அறிவித்து இருந்தாலும், நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பது ஃப்ரீ வைஃபை என்பதை மறக்க வேண்டாம். ஃப்ரீ வைஃபையில் நீங்கள் இயங்கும்போது உங்கள் அனைத்துத் தகவல்களையும் திருடுவது என்பது ‘ஸ்மார்ட் கொள்ளையர்களுக்கு’ அல்வா சாப்பிடுவதுபோல. சில நொடிகளில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு, பணம் கொள்ளையடிக்க 99 சதவிகிதம் வாய்ப்புகள் அதிகம். ஃப்ரீ வைஃபையில் நீங்கள் இருக்கும்போது எவ்வளவு பெரிய சலுகைகள் வந்தாலும், தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.

சில இணையதளங்கள் நம்மைக் கவர்வதற்காக நம்ப முடியாத சலுகைகள் கொடுத்தால், கிடைத்தவரை லாபம் என்று பொருட்களை வாங்காதீர்கள். அது, பல சிக்கலில் உங்களைக்கொண்டு போய்ச் சேர்க்கும். மேலும், நீங்கள் பார்க்கும் பொருட்களின் விலையை, மற்ற இடங்களில் விற்பனை செய்யும் அதே பொருட்களின் விலையை ஒப்பீடு செய்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள அதே பொருட்கள் விலை அதிகமாகவும், குறிப்பிட்ட அந்த இணை யதளத்தில் விலை குறைவாகவும் மற்றும் அந்தப் பொருட்களின் படங்கள் நம்மை மிகவும் கவர்வதுபோலவும் இருந்தால், அந்த இணையதளத்துக்கு பை சொல்லி வெளியேறுங்கள்.

சமூக வலைதளங்களின் மூலமாகவோ அல்லது மொபைல் எஸ்.எம்.எஸ் மூலமாகவோ நம்ப முடியாத சலுகைகள் உங்களைத் தேடி வந்தால் அவசரப்பட்டு பொருட்களை வாங்கிவிடாதீர்கள். முதலில் அந்த இணையதளத்தின் விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். பின்பு, அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து, உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பொருட்கள் திருப்தி அளிக்கவில்லை எனில், பணம் திருப்பித் தரப்படும் போன்ற வாக்குறுதிகள் கொடுப்பார்களாயின், அவர்களிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கான பில் மற்றும் கணக்கில் விதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைத் திரும்பப் பெறவதற்கு, அதன் பில் அவசியமாகிறது. ஒருவேளை இணையதளங்கள் கட்டணங்களைத் திரும்பத் தராவிடில், அவர்கள் மீது நீதிமன்றம் வாயிலாக வழக்குத் தொடுத்து உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு பில் உதவும்.

கிரெடிட், டெபிட் கார்டுகள் அல்லது வங்கிக் கணக்கு சார்ந்த தகவல்களை அனுப்பும்போது, அந்த இணையதளம் பாதுகாப்புச் செய்யப்பட்டதா என அறிந்தபின்பு தகவல்களைச் சொல்லுங்கள். அதாவது, https:// என்று உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், அதன் பேட்லாக் ( Secure Padlock) ஐகானை செக் செய்துகொள்வது நல்லது. வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் அனுப்பும்போது அந்த இணையதளம் நீட்டிக்கப்பட்ட மதிப்பாய்வுச் சான்றிதழ் (Extended Validation Certificate) பெற்றுள்ளதா என்பதையும் நினைவில்கொண்டு செயல்படுங்கள்.

இணையதளத்தில் நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு கிளிக் செய்யும்போது, வேறு ஏதேனும் இணையதளத்துக்கு உங்களை அழைத்துச் சென்றால் அந்த இணையம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதுபோன்ற இணையதளங்களிலிருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள்.

சில விளம்பரங்கள் தானாகவே ஓப்பன் ஆகினால் அவை உங்களை ஸ்பேம் ப்ரோகிராம் பக்கத்துக்கு அழைத்துச்செல்லும். இவை, மிக ஆபத்தானவை. இந்த ஸ்பேம் ப்ரோகிராம்கள் அந்தச் சமயம் உங்களின் கணக்கில் எந்த விதமான தகவல்களையும் திருடவில்லை என்றால், அந்த ஸ்பேம் ப்ரோகிரமால் சில வைரஸ்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ தரவிறக்கம் செய்யப்பட்டுப் பின் பொறுமையாக உங்களை நோட்டமிட ஆரம்பிக்கும். பின்னாளில் உங்களின் கணக்கில் உள்ள மொத்த தகவல்களையும் இந்த வைரஸ் திருடிவிடும்.

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு நீங்க ரெடி:

ஒரு வெப்சைட்டில் இருக்குபோது அங்கிருந்து இன்னொரு வெப்சைட்டுக்குச் செல்வதற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒருபோதும் அவ்வாறு செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் வேலை முடிந்தவுடன், மீண்டும் பிரௌசரில் எந்த வெப்சைட்டுக்குச் செல்ல நினைக்கிறீர்களோ, அந்த வெப்சைட்டின் URL-ஐக் கொடுத்து செல்லுங்கள். இதுவும் உங்கள் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

ஆன்லைனில் பொருட்கள் பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப் பொருட்கள் இணையதளத்தில் சொல்லியுள்ள தரத்தில் உள்ளதா… சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்தப் பொருளின் தரம் பற்றி மோசடி வழக்கை மேற்கொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கான நன்மை கிடைக்கும். பொருளின் மீதுள்ள மோகத்தால், இணைய வர்த்தகத்தாரின் கண்டிஷன்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். அவர்கள் கொடுத்துள்ள கண்டிஷன்களை மிக நுணுக்கமாகப் படிக்கவேண்டும். ஏனென்றால், இணையதளத்தில் எங்கேனும் ஓர் ஓரமாக மிகச் சிறிய எழுத்துகளால் அவர்களின் இணையதளம் பற்றியும், பொருளின் நம்பகத்தன்மை பற்றியும் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து இருப்பார்கள், இதனைப் படிக்காமல் அந்த இணையதளத்துக்குள் செல்லாதீர்கள்.

ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங் களுக்கு கிடைக்கும்வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

Exit mobile version