மத்திய அரசின் கடன் மேலாண்மை நடவடிக்கை; செப்டம்பர் 3-ல் Buyback Auction
மத்திய அரசு வெளியிட்ட அரசு பத்திரங்களில் ரூ.30,000 கோடி மடதிப்பிலான பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப வாங்குவதற்கான Buyback Auction-ஐ இந்திய ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது.
மத்திய அரசின் பணப்புழக்கம் மற்றும் கடன் மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எந்தெந்த அரசு பத்திரங்கள்?
மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள குறிப்பிட்ட Government Securities இந்த buyback நடவடிக்கையில் இடம்பெறுகின்றன.
இதில் 2026 மற்றும் 2027 காலகட்டத்தில் முதிர்வடைய உள்ள அரசு பத்திரங்கள் அடங்குகின்றன.
இந்தப் பத்திரங்களை வைத்திருக்கும் வங்கிகள் மற்றும் பிற சந்தைப் பங்கேற்பாளர்கள் RBI நடத்தும் ஏலத்தில் அவற்றை மத்திய அரசிடம் திரும்ப விற்பனை செய்வதற்கான bids-ஐ சமர்ப்பிக்கலாம்.
மொத்தமாக ரூ.30,000 கோடி வரை அரசு பத்திரங்களை திரும்ப வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Buyback என்றால் என்ன?
அரசு தனது செலவுகளை மேற்கொள்வதற்காக சந்தையில் இருந்து கடன் பெறும்போது Government Securities எனப்படும் அரசு பத்திரங்களை வெளியிடுகிறது.
இந்தப் பத்திரங்களுக்கு குறிப்பிட்ட முதிர்வு காலம் இருக்கும். அந்த காலம் முடிவடையும்போது முதலீட்டாளர்களுக்கு அரசு பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் அரசிடம் போதுமான பணப்புழக்கம் இருக்கும்போது, முதிர்வு தேதிக்கு முன்பே சில பத்திரங்களை சந்தையிலிருந்து திரும்ப வாங்க முடியும். இதுவே Government Securities Buyback எனப்படுகிறது.
இதன்மூலம் வரவிருக்கும் காலங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தத்தை குறைத்து, அரசின் கடன் முதிர்வு கால அட்டவணையை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
RBI-யின் பங்கு என்ன?
இந்த நடவடிக்கையில் அரசு பத்திரங்களை வாங்குவது RBI அல்ல.
மத்திய அரசின் கடன் மேலாளராக செயல்படும் RBI, மத்திய அரசின் சார்பில் buyback auction-ஐ நடத்துகிறது.
ஏலத்தில் சந்தைப் பங்கேற்பாளர்கள் எந்த விலையில் தங்களிடம் உள்ள தகுதியான அரசு பத்திரங்களை திரும்ப விற்க தயாராக உள்ளனர் என்பதை தெரிவிப்பார்கள்.
அவற்றில் எந்த bids-ஐ ஏற்க வேண்டும் என்பதையும், ஒவ்வொரு பத்திரத்திலும் எவ்வளவு தொகையை திரும்ப வாங்க வேண்டும் என்பதையும் அரசு முடிவு செய்யும்.
பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பா?
இது பொதுமக்களின் வங்கி டெபாசிட், சேமிப்பு அல்லது கடன்களில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு அல்ல.
மத்திய அரசின் கடன் மற்றும் பணப்புழக்கத்தை நிர்வகிப்பது தொடர்பான நிதிச் சந்தை நடவடிக்கையாகும்.
அரசுப் பத்திரச் சந்தையில் liquidity மற்றும் yields மீதும் buyback நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வங்கிகள், பத்திர முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சந்தையினரால் இது முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
